சிலந்தி வலையில் சிக்கிய திருமாவின் தேர்தல் அரசியல் நாடகம்! சுதாரித்த அதிமுக!  - Seithipunal
Seithipunal


மதுவிலக்கு குறித்து பேசுவதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும், பின்னடைவு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து திருமாவளவன் அறிவித்தது முதலே, திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, திமுகவுக்கு எதிராக இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

மேலும் வருகின்ற 2026 தேர்தலில் கூடுதலாக சீட்டுகளை பெறுவதற்காக திருமாவளவன் நடத்தக்கூடிய அரசியல் நாடகம்தான் இது என்றும், இதற்காகத்தான் அதிமுக, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் திருமாவளவனுக்கு எதிராக சில திமுக உறுப்பினர்களும், திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்களும் கடுமையாக விமர்சித்து எழுத தொடங்கினர். 

இது ஒரு புறம் இருக்க வெளிப்படையாகவே அரசியல் கட்சி நிர்வாகிகளும், ஊடகங்களும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் திட்டம் தீட்டு வருவதாக பேசத் தொடங்கினர், 

சர்ச்சைகளுக்கு எப்போதும் போல முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன், திமுக கூட்டணிகள் தான் இருக்கிறோம், திமுகவுடன் தான் என்றும் கூட்டணி தொடரும் என்று வழக்கம் போல தெரிவித்தார். 

வழக்கம் போல என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த ஒரு இரு வருடங்களாக அவ்வப்போது திமுகவை எதிர்த்து திருமாவளவன் பேசுவதும், பின்னர் கூட்டணி தொடர்வதாக தெரிவிப்பதும் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும், விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் கையில் இல்லை என்றும், தற்போது அது திமுகவின் கைப்பிடியில் இருப்பதாகவும், திருமாவளவனே நினைத்தால் கூட திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது அல்லது வெளியேற விடாமல் அவர் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் சில ஊடகவியலாளர்களும், அரசியல் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த மதுவிலக்கு மாநாட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா என்றால், அதுவும் இல்லை. மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல், பின்னடைவு எது ஏற்பட்டாலும், அதனை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கூறிய திருமாவளவன், நேற்று மாலையே திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார். 

திருமாவளவனின் இந்த செயல், கடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவை நம்ப வைத்து ஏமாற்றினார் என்ற விமர்சனம் இந்த நேரத்தில் நினைகூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைவது போல், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த திருமாவளவனின் பேச்சை நம்பி, அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. 

ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில், திருமாவளவன் அதிமுகவுக்கு அல்வா கொடுத்துவிட்டு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறாமல் ஏமாற்றினார் என்று அரசியல் விமர்சகர்களும், அதிமுக சார்பு ஊடகவியலாளர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

தற்போதும் கூட திருமாவளவன் திமுகவுக்கு எதிராக ஒரு சில வார்த்தைகளை உபயோகப்படுத்தும் நிலையில், அதனை நம்பி ஒரு சில அதிமுகவினர் விடுதலை சிறுத்தை அதிமுக கூட்டணியில் இணையும் என்று பேசினாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் பட்ட பாடத்தை மனதில் கொண்டு, இதனை யாரும் நம்ப வேண்டாம், திருமாவளவன் அரசியல் நாடகம் நடத்துகிறார், நம்மளை வைத்து திமுக கூட்டணியில் கூடுதலாக சீட்டுகளை பெறவே இதனை செய்து வருவதாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai chiruthaigal katchi thirumavalavan  ADMK DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->