தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு எந்த பதவி?. - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
vijayakant son vijaya prabakaran appointed youth wing secretary
இன்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.கவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ், கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
vijayakant son vijaya prabakaran appointed youth wing secretary