மோசமான உடல்நிலை.. ஆனாலும் இத்தனை உதவிகளா.? கேப்டனின் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை முன்னிட்ட்ய் ரசிகர்களை சந்தித்துள்ளார். இத்தகைய நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, " நீண்ட நாட்களாக ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று கேப்டன் ஆசை கொண்டார். 

அது இன்றுதான் நிறைவேறியுள்ளது. அவர் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் கார்த்தி கேப்டனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவருக்கும், நடிகர் சங்கத்திற்கும் தேமுதிக சார்பில் நன்றி. 

அரசியல், சினிமாவிற்கு அப்பாற்பட்டு மனிதநேயமிக்க தலைவராக தமிழகத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கேப்டன் மட்டும்தான். இன்று கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் பள்ளியில் வழக்கம்போல உணவு அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று தேமுதிக சார்பில் டொனேஷன் கொடுக்கப்பட்டது.

ஆட்டோ நண்பர்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுக்க 80 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பண உதவி கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மருத்துவ, ரத்ததான முகாம்கள் நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிறுத்தப்படாது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளில் நிச்சயம் தொடரும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth meet fans and premalatha Pressmeet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->