அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

முகமது ஷெரிப் (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்), K. சேகர் (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்), ஸ்ரீதர் P. சங்கர்(திண்டிவனம் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி), H. மஸ்தான் (திண்டிவனம் நகர சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்),  டாக்டர் E. யோகேஸ்வரன் (விழுப்புரம் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர்), ராஜாராணி (கழகப் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர், செஞ்சி) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viluppuram admk members dismissal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->