நமக்கு நாமே - அரசியல் நாடகத்திற்காக காந்தியின் புகைப்படத்தை உடைத்த ராகுல் அலுவலக உதவியாளர், காங்கிரஸ் தொண்டர்கள்.!
wayanad rahul office drama attack
கேரள மாநிலம், வயநாடு மாவட்ட தலைநகர் கல்பேட்டையில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது,
"இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மகாத்மா காந்தியின் படத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அன்று மாலை காந்தியின் படம் நொறுங்கி கிடந்துள்ளது. மகாத்மா காந்தியின் படத்தை காங்கிரஸ் தொண்டர்களே சேதப்படுத்தியுள்ளனர்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மகாத்மா காந்தி படத்தை சேதப்படுத்தியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ராகுல் காந்தியின் எம்.பி அலுவலக உதவியாளர் ரதீஷ் குமார், காங்கிரஸ் தொண்டர்கள் நவுஷத், முஜிப் மற்றும் எஸ்.ஆர்.ராகுல் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
English Summary
wayanad rahul office drama attack