யார் அந்த சார்? பெரும் பரபரப்பை உண்டாக்கிய போஸ்டர்!
Yaar Antha sir ADMK Poster viral
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், மாணவி அளித்த புகாரில், குற்றவாளி ஞானசேகரன் மிரட்டும் போது செல்போனில் சார் என்று அழைத்தது யாரை என்ற கேள்வி பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகிறது.
அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை தற்போது எழுப்பும் கேள்வியும் அதுவாகத்தான் இருக்கும் நிலையில், இதற்கு கொடுக்கப்படும் விளக்கம் மற்றும் பதில் எற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே பேச தொடவிட்டனர்.
அந்த சமயத்தில் ஞானசேகரன் செல்போன் பிளைட் மோடில் இருந்ததாகவும், மாணவியிடம் தான் தனி ஆள் இல்லை, தனக்கு பின்னால் ஒரு குழு இருப்பது போன்ற ஒரு கட்டமைப்பை ஞானசேகரன் செய்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் சென்னை காவல் ஆணையரே விளக்கம் அளித்து உள்ளார்.
ஆனால், மாணவி அளித்த புகாரில், குற்றவாளியின் செல்போனுக்கு அழைப்பு வந்தாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், செல்போன் பிளைட் மோடில் இருந்தால் அழைப்பு வருமா? ஏதோ சம்பவம் நடந்த அந்த நொடியே குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்தது போல் அல்லவா காவல்துறையில் விளக்கம் இருக்கிறது என்று பல்வேறு கேள்விகளை அரசியல் கட்சியினர் வினவ தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், "யார் அந்த SIR" என்ற கேள்வியுடன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டு வருகிறது.
English Summary
Yaar Antha sir ADMK Poster viral