திடீர் திருப்பம்! தெலுங்கானாவில் கைக்கு கை கொடுக்கும் ஷர்மிளா!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநில சட்டமன்ற பொது தேர்தல் வரும் நவம்பர் 30ம் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும்,. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா காங்கிரஸ் கட்சியோடு இணைய முயற்சி மேற்கொண்டார். 

இதற்காக டெல்லி சென்று சுகன்யா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த அவர் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைப்பதற்கும் முயற்சி செய்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவு வந்ததால் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தெலுங்கானா சட்டமன்ற பொது தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார்.

மேலும் பாளையார் தொகுதியில் அவர் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்த நிலையில் அவருடைய தாயார் விஜயம்மா செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. தெலுங்கானா மாநிலத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய இந்த சமயத்தில் திடீர் திருப்பமாக சர்மிளா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ysrt Sharmila quite from Telangana election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->