வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் பத்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி சிறப்பித்தார். 

இதேபோன்று நடிகர் சூர்யா காலம் காலமாக அகரம் பவுண்டேசன் மூலமாக பல்வேறு உதவிகளை செய்து வந்தாலும், சமீபத்தில் பெரிய அளவில் விழா எடுத்து மாணவ மாணவிகளை சிறப்பித்தார்.

இதற்கிடையே நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் "இருவரும் சேவை மனப்பான்மையோடு இருப்பதால் அரசியலுக்கு வர வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில், இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், ரத்த தானம், கண் தானம், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யாவின் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், ’’ உன்ன மாரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும் விரைவில் நம்ம ஆட்சி வரும்பார்" என்றும் ஒரு பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக நடிகர் சூர்யா பேசுவது போன்ற காட்சி அமைத்து போஸ்டர் அடித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor surya birthday poster viral in social media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->