ஓட்டு போட்ட புகைப்படத்தை பதிவு செய்த சின்மயிக்கு., பிரபல இயக்குனரால் ட்விட்டரில் கிடைத்த பல்பு.!!
sinmayi twit has been converted comedy by famous tamilpadam movie director
இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர். திரைத்துறையை சார்ந்த பாடகி சின்மயி தனது வாக்குகளை பதிவு செய்து விட்டு., வாக்குகளை செலுத்தியத்திற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யவே., இதனை கண்ட தமிழ்ப்படத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் அவர் அணிந்திருந்த கண்ணாடியை வைத்து அவரை கலாய்த்துள்ளார்.
தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன், சின்மயி அணிந்திருந்த கண்ணாடியை கலாய்த்துள்ளார். அந்த பதிவில் "நீங்கள் காரின் கண்ணாடியை எவ்வாறு பொருத்திப் போகிறீர்கள்?" என்று கேட்டுள்ளார்.
English Summary
sinmayi twit has been converted comedy by famous tamilpadam movie director