'காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது..' என்று நீங்கள் பாடும் நேரம் வந்து விட்டது.. இந்த ஒரு எளிய பரிகாரம் போதும் மக்களே...!! - Seithipunal
Seithipunal



பலரும் பணத்தை சம்பாதிக்க தான் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு சிலருக்கு அவர்கள் கைகளில் பணம் தங்குவதில்லை. கையில் பணம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வருமானம் குறைவாக வந்தாலும், எல்லாம் அமைந்து நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள். 

இதற்கு ஜார்கண்டைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் ஒரு எளிய பரிகாரத்தை கூறியுள்ளார். இதை நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றினால், உங்கள் வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை என்பதே இருக்காது. மஹாலட்சுமிக்கு மிகவும் பிடித்தவை சிறிய சில்லறை நாணயங்கள் தான். 

எனவே இந்த சிறிய சில்லறை நாணயங்களை முதலில் பத்திரமாக வைக்க வேண்டும். மேலும் கடலில் கிடைக்கும் சங்கும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதையும் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கலாம். ஆனால் இவற்றை நீங்கள் வைத்திருப்பது உங்கள் வீட்டினரைத் தவிர வேறு வெளியாட்கள் யாருக்கும் தெரியவே கூடாது என்பது மிக முக்கியம். 

மேலும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த இன்னொரு பொருள் அரிசி. எனவே இந்த அரிசியையும் நீங்கள் வெளியாட்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்காமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தாலே போதும். உங்களுக்கு பணம் எப்படியாவது வந்து கொண்டே இருப்பதோடு, உங்கள் வீட்டில் பணம் தங்கவும் தொடங்கும்.

இவை மிக, மிக எளிய பரிகாரங்கள் தான். ஆனால் இவை அதிக பலன் தரக் கூடியவை. இதைச் செய்தாலே உங்களிடம் நீண்ட காலம் பணத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do These Simple Home Remedies To Make Your Home Treasury


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->