அனுமன் ஜெயந்தி.. விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு.!!
hanuman jayanti 2022
அனுமன் ஜெயந்தி :
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. இதுபோல், திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் அனுமன் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை (02.01.2022) வரவிருப்பதால், அனைத்து அனுமன் கோவில்களிலும் விமர்சையாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
அனுமன் ஜெயந்தி... விரதம் இருக்கும் முறை :
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும்.
அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அல்லது வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றியும் வணங்கலாம்.
அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.
பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.
மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம்.
மாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளை சாற்றி வழிபடலாம்.
இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராம நாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், ஸ்லோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் :
அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.
நினைத்த காரியம் கைகூடும்.
துன்பங்கள் விலகும்.
இன்பங்கள் பெருகும்.
குறிப்பாக சனியின் பிடியில் உள்ளவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம் :
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்
சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர். சிவனையும், திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறுவோம்.