இன்று அனுமன் ஜெயந்தி.. சனி தோஷம் விலக ​அனுமனை மனதார வழிபடுங்கள்.!! - Seithipunal
Seithipunal


நமது புராணங்கள், இதிகாசங்களில் எத்தனையோ வீர புருஷர்கள் இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் மனதில் தங்களின் சிறந்த குணங்களால் நிலைத்து நிற்கின்றனர். அப்படிபட்ட ஒரு காவிய நாயகன்தான் 'ஸ்ரீ ஆஞ்சநேயர்" ஆவார்.

மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம் 'அனுமன் ஜெயந்தி" தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இன்று (02.01.2022) ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தியாகும்.

ராமாயண காவியத்தில் ஈடுஇணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்குச்சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன்.

இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.

ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷங்கள் குறிப்பாக சனிக்கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும்.

தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் கிடைக்கும்.

அவருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாக போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும், வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

ராம நாமம் கேட்கும் இடங்களில் அனுமன் அமர்ந்திருப்பார் என்பது ஐதீகம். ராமபிரானின் சேவகன் அனுமனை அவர் அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hanuman jayanti special 2021


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->