கர்மவினைகளை போக்கும் ஓம் பிரணவ மாலை நலம் காக்கும் ஓம் பிரணவ மாலை..!! - Seithipunal
Seithipunal


பிரபஞ்சத்தை ஒன்றிணைக்கும் அச்சாணியாகவும், ஆற்றலாகவும் இருப்பது ஓம் என்னும் பிரணவமே. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கொண்ட மாலையை நீங்கள் அணிவதன் மூலம் மனதில் ஒருவித அமைதி உண்டாகும். மேலும், இம்மாலையை அணிவதால் எவ்வித கர்ம வினைப்பயனும் நெருங்குவதில்லை.

தினமும் பத்மாசனத்தில் அமர்ந்து 10 நிமிடம் ஓம் ஸ்டோன் மாலையை கொண்டு தியானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. அதிலும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உடல் முழுவதும் அதனுடைய அதிர்வலைகள் உண்டாகி உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கக்கூடும்.

ஓம் ஸ்டோன் மாலையை அணிவதனால் பஞ்சபூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி, காந்த சக்தியை உருவாக்குகிறது. இதனால் நோய்கள் நீங்கி உடலும், உள்ளமும் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஓம் பிரணவ மாலையை அணிவதால் கிடைக்கும் பலன்கள் :

எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளி கொண்டுவந்து நேர்மறை எண்ணங்களை பெருக்குகிறது.

இதயமும், செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள் உருவாவதை தடுக்கிறது.

சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள் ஓம் பிரணவ மாலையை அணிவதால் கவனச்சிதறல்கள் குறையும்.

ஓம் பிரணவ மாலையை அணிவதால் நாள் முழுவதும் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karmavinai pokum pranava malai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->