அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர வெள்ளிக்கிழமை சூரிய உதயத்தில் இதை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம் தான் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஒரு வீட்டில் செல்வங்கள் தொடர்ந்து சேருவதற்கு அங்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் தேவை. வருமான தடை நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வ மழை பொழிய செய்யக்கூடிய அற்புத எளிய பரிகாரம் தான் இது.

வாழ்க்கையில் எல்லா குணநலன்களையும், பெறுவதோடு மட்டுமல்லாமல் பணம், பொருள் எனும் செல்வங்களையும் பெறுவதற்கு மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது படவேண்டும்.

காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கிறது. இவர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நாளடைவில் அடைந்து விடுவார்கள். ஆனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாதவர்கள் சூரிய உதயத்தின் பொழுதாவது எழ வேண்டும்.

சூரிய உதயமாகும் முன்பு எழுவது தான் ஒரு மனிதனுக்கு சிறந்த நற்குணங்களையும், செல்வத்தையும் அளிக்கும்.

சூரிய உதயத்தின் பொழுது எழுந்து வாசல் கூட்டி பெருக்கி பச்சரிசி மாவில் கோலம் போட்டுவிட்டு, உங்கள் பூஜை அறையில் ஒரு சிறிய பெட்டியில் உங்களிடம் இருக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தை வைக்க வேண்டும்.

அதனுடன் மல்லிகைப்பூ சிறிதளவு, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் கொஞ்சம், சந்தன கட்டி ஒன்று, வில்வ இலை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக இரண்டு குத்து விளக்குகளில் ஐந்து முக திரி இட்டு எண்ணெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை எரிய விட வேண்டும்.

இவ்வாறு சூரிய உதயத்தின் பொழுது செய்து வருபவர்களுக்கு நாளடைவில் வருமான தடை நீங்கும் என்பது நியதி. இதன் மூலம் உங்கள் பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்து, செல்வ சேர்க்கை உண்டாகும்.

தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பெண்கள் இதை வீட்டில் கடைபிடித்து வர வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களும் இதை தொழில் ஸ்தாபனங்களில் செய்யலாம்.

தொழில் ஸ்தாபனங்களில் செய்பவர்கள் ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராமல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வீட்டில் செய்யும் பொழுது பெண்கள் செய்வது உசிதமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pray Friday get money and more wealth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->