குருபெயர்ச்சி || ஆலங்குடியில் குவிந்த பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குரு தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர்.

நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். அந்த வகையில், இன்று குரு பகவான் கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு மாலை 5:28 மணிக்கு பெயற்சியானார். 

இதைத் தொடர்ந்து ஆபத்சகாயேஸ்வரர் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு  தங்க கவசம் அணிவிக்கபட்டு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு மகா தீபாரதனை நடைபெற்றது. 

இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special poojai in alangudi guru temple for gurupeyarchi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->