தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனையா? எளிய பரிகாரம் இதோ...!! குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க செய்ய வேண்டியவை...!! - Seithipunal
Seithipunal


வீடு என்பது பார்ப்பதற்கு உயிரற்ற ஒரு இடம் தான். ஆனால் அந்த வீட்டிலிருக்கும் அழகான குடும்பத்தின் அனைத்து விதமான உணர்வுகளையும் அந்த வீடு தனக்குள் அடக்கமாய் வைத்துள்ளது.

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எப்போதுமே வீட்டில் பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் மன நிம்மதி இருக்காது.

எனவே, தேவையற்ற பிரச்சனைகள் குடும்பத்தில் வராமல் இருக்கவும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், குடும்ப தோஷம் இருந்தால் அதிலிருந்து விடுபடவும் என்னென்ன செய்யலாம்? என இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

செல்வம் நிலைக்க, பணம் விருத்தியடைய கொடுக்கல், வாங்கல் போன்ற செயல்களை செவ்வாய்க்கிழமையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அதிலும் செவ்வாய் ஓரையில் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. யாருக்காவது பணத்தைத் திரும்ப கொடுப்பதாக இருந்தால் செவ்வாய் ஓரையில் கொடுப்பதை கடைபிடித்து பாருங்கள்.

பணம் கொடுப்பதாக இருந்தாலும், வாங்குவதாக இருந்தாலும் வாசற்படியின் மேல் நின்று கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே அல்லது வெளியே நின்று கொண்டு தான் பணம் கொடுக்கல், வாங்கல் செயல்களை செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் பால், மோர், தயிர் போன்றவற்றை வீட்டிலிருந்து மற்றவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது. அதேபோல் வாழை இலை, வெற்றிலை இவற்றை காய விடக்கூடாது.

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இது போன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

வீட்டில் ஏற்றப்படும் குத்து விளக்கு, காமாட்சி விளக்கு இவற்றை தானாக அணைய விடக்கூடாது. விளக்கு தானாக அணைவதற்கு முன்னதாகவே அதனை மலை ஏற்ற வேண்டும்.

புஷ்பம் வைத்து தான் அதனை குளிர்விக்க வேண்டும். எப்போதும் விளக்கை குளிர்விக்க வேண்டும், மலை ஏற்ற வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். அதனை அணைக்க வேண்டுமென்று சொல்லக்கூடாது.

ஒரு சிறிய மஞ்சள் நிற காட்டன் துணியில் வேப்ப மரத்தின் சிறிய கிளைகளிலிருந்து 3 சின்ன குச்சிகள் மற்றும் வாழை மரத்தின் வேரை கத்தரிக்கோலால் வெட்டாமல் கையாலேயே நறுக்கி 3 துண்டுகள் என இவ்விரண்டையும் வெள்ளிக்கிழமை அன்று மாலை வீட்டில் இருக்கக்கூடிய கன்னிப் பெண்ணின் கைகளில் வைத்து நன்றாக வேண்டிக்கொண்டு, ஒரு சிறிய முடிச்சு போல கட்டி பூஜை அறையில் வைத்து சாதாரணமாக வழிபாடு செய்தாலே போதும்.

இந்த வேரை வைத்து மூன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து பூஜை செய்து வாருங்கள். அதன் பின்பு அந்த வேரை எடுத்து கால்படாத இடத்தில் போட்டுவிடலாம் தவறொன்றும் கிடையாது.

இந்த இரண்டு பொருளையும் வைத்து வழிபாடு செய்யும் போது குடும்பத்தில் இருக்கும் கசப்பான அனுபவங்கள் மறைந்து வாழையடி வாழையாக குடும்பம் ஒற்றுமையாக சண்டை சச்சரவு இல்லாமல் வாழும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thodranthu veetil prachanaiya?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->