தினம் ஒரு திருத்தலம்.. அமர்ந்த கோலத்தில் வீரபத்திரர்.. அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும் ஊரில் அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னையில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் வேளச்சேரி என்னும் ஊர் உள்ளது. வேளச்சேரியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

அற்ப ஆயுள் பெற்றிருந்த சிவன் பக்தனான மார்க்கண்டேயரின் ஆயுளை எடுக்க சென்ற எமனை சிவபெருமான் எட்டி உதைத்து, அவனது பதவியை பறித்தார். இழந்த பதவியை பெற எமன் பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டு, இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டார்.

அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன் 'தண்டீஸ்வரர்" என்று பெயர் பெற்றார்.

தண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி, தலையை பணிவாக கீழே சாய்த்திருப்பது விசேஷமான அமைப்பு ஆகும். அம்பாள் கருணாம்பிகை சன்னதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது.

சூரிய ஒளி தை முதல் தேதியில், சிவலிங்கம் மீது விழுகிறது. வேதங்களின் தோஷம் போக்கிய சிவன் இங்கிருப்பதால் இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'யோக தட்சிணாமூர்த்தி" எனப்படுகிறார்.

இக்கோயிலில் சப்த கன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை, செல்லியம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள். இங்கு சப்த கன்னியர் சன்னதியை 'செல்லியம்மன் சன்னதி" என்றே அழைக்கின்றனர்.

வேறென்ன சிறப்பு?

பொதுவாக எல்லா கோயில்களிலும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிவாம்சமான வீரபத்திரர் இங்கு கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது மிகவும் சிறப்பாகும். இவர் கன்னி பெண்களை காக்கும் தெய்வமாக அருளுகிறார்.

மூலவர் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கையும், பிரகாரத்தில் லட்சுமி மற்றும் சரஸ்வதியும் உள்ளனர். ஒரே இடத்தில் நின்று மூன்று தேவியரையும் தரிசிக்கும் வகையில் இக்கோயில் உள்ளது.

பிரகாரத்தில் உள்ள வேத விநாயகர் கைகளில் வேதங்களுடன் காட்சி தருகிறார்.

இங்கு அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்வது சிறப்பாகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்ரா பௌர்ணமி, ஆடி ஞாயிறு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியவை இக்கோயிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

ஆயுள் விருத்தி பெறவும், இழந்த பதவி கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாள் மற்றும் வீரபத்திரருக்கு வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special thandeeshwarar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->