நாளை டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை வைத்த பாபர் அசாம்.!
Babar asam request to fans for pray to Pakistan won world cup
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நாளை மதியம் 1.30 மணிக்கு (நவம்பர் 13ஆம் தேதி) மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
![](https://img.seithipunal.com/media/IMG_20221112_133318-2r8wf.jpg)
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியதாவது, நாங்கள் கடைசி 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் பதற்றமில்லாமல் உற்சாகமாக இருக்கிறோம். ஆனால் அழுத்தம் உள்ளது.
ஆனால் எங்கள் மீது வைக்கும் உறுதி மற்றும் நம்பிக்கையினால் மட்டுமே அதனை தகர்க்க முடியும். எங்களுடைய ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் தரும் உற்சாகத்தின் மூலம் நாங்கள் நிலைநிறுத்திக் கொள்கிறோம்.
மீண்டும் எங்களுக்கு ஆதரவளித்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் அணியில் இறுதி போட்டியில் எந்தவித மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை. இறுதிப்போட்டியில் வெற்றி பெற எங்கள் அணியின் முழு பலத்தையும் வெளிப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
English Summary
Babar asam request to fans for pray to Pakistan won world cup