மைதானத்தில் அத்துமீறி ரோகித் சர்மாவை காண வந்த ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபாரதம் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


மைதானத்தில் அத்துமீறி ரோகித் சர்மாவை காண வந்த ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா ஜிம்பாவே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி பில்டிங் செய்த போது கேப்டன் ரோகித் சர்மாவை பார்க்க ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி ஓடி வந்தார். அதன் பிறகு அங்கிருந்து காவலர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகருக்கு ரூ.6.5 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fan entered cricket ground fined 6.5 lakhs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->