தோனி நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை; ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்கிறார் கில்கிறிஸ்ட்..!
Gilchrist says Dhoni should retire from IPL
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டியின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வருகிறது. 10 அணிகளுக்கு இடையிலாக நடைபெறும் இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் 05 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் 09 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 07-இல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், எஞ்சிய 05 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மாத்திரமே புள்ளிகள் பட்டியலில் கௌரவமான இடத்தை பிடிக்கும். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
'தோனி நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை. அவருக்கு என்ன செய்வது என்று தெரியும், அவர் இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை . நான் உங்களை நேசிக்கிறேன் தோனி. நீங்கள் ஒரு சாம்பியன்.' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Gilchrist says Dhoni should retire from IPL