Icc சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி....! 27 ஓவர் முடிவில் NZ 124 /4...
ICC Champions Trophy Final NZ 124 runs 4 wicket at the end of 27 overs
சாம்பின்ஸ் டிராபி ஐசிசி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதில் துவக்கத்தில் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் ரச்சின்ரவீந்திரா களமிறங்கினார்கள். இதில் அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கடந்து சிறப்பாக விளையாடியது.

இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து, 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. டாம் லாதாம் - மிட்செல் ஜோடி தற்போது நிதானமாக விளையாடி வருகின்றனர்.இதில் இறுதி போட்டியைக் காண ரசிகர்கள் பலர் மைதானம் முழுவதுமாக நிறைந்துள்ளன. நியூஸிலாந்து அணிக்குச் சளைக்காமல் ஈடு கொடுத்து வருகிறது இந்திய அணி.
English Summary
ICC Champions Trophy Final NZ 124 runs 4 wicket at the end of 27 overs