இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி மைதானம் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  

இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால் இந்த மைதானத்தின் பராமரிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும், அடுத்த சில நாட்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியை தர்மசாலா மைதானத்தில் இருந்து வெறொரு மைதானத்திற்கு மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது‌. 

அதன்படி விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி 3வது டெஸ்ட் போட்டி இந்தூர் அல்லது ராஜ்கோட்டுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 3rd test match ground change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->