#BigBreaking || 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று மாபெரும் சாதனை.!
India beat Indonesia to win the Thomas Cup
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 12ந்தேதி நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், இன்று தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி பாங்காக்கில் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கியது.
இதில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
English Summary
India beat Indonesia to win the Thomas Cup