#IPL2023 : மும்பை மிரட்டல் பந்துவீச்சு.. லக்னோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.   அதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது.

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் அபாரமான பந்துவீச்சில் லக்னோ அணி அடுத்தடுத்த விக்கெடுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக லக்னோ அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 mumbai won against Lucknow and reach qualifier 2


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->