அய் ஜாலி!!! IPL 2025 : சென்னை vs மும்பை 23ம் தேதி மோதவுள்ளது...!!! - ticket விற்பனை தொடங்கியது...
IPL 2025 Chennai vs Mumbai to clash on 23rd Ticket sales have started
IPL 2025 தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் IPL இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் எதிர்கொள்கிறது.

அதற்கு அடுத்த நாளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் IPL ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23-ந் தேதி நடக்கிறது.
இன்று இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL தொடர்களைக் காண மக்கள் பெரும் ஆவலுடன் காத்துகொண்டு உள்ளனர்.தற்போது முன்பதிவு செய்ய ஏராளமான மக்கள் முனைந்துள்ளனர்.
English Summary
IPL 2025 Chennai vs Mumbai to clash on 23rd Ticket sales have started