வாழ்வா? சாவா? தோற்றால் சிஎஸ்கே அதிகாரபூர்வமாக வெளியேறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
IPL 2025 csk vs Punjab
2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பிளேஆஃப் வாய்ப்பு ஏற்கெனவே மிகமிக வாய்ப்பு குறைந்த நிலையில் உள்ளது.
தற்போது 4 புள்ளிகளுடன் அட்டவணையின் கடைசி இடத்தில் இருக்கும் CSK, இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தால், அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேறக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..
சேப்பாக்கம் மைதானம் ஒருகாலத்தில் CSK-வின் கோட்டையாக இருந்தாலும், இச்சீசனில் அது எதிர்மறையான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.
அணித் தேர்வு, கேப்டன்சி, பேட்டிங் வரிசை உள்ளிட்ட பல அம்சங்களும் தோல்விக்கு காரணமாகவே பார்க்கப்படுகின்றன.
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாக விளையாடி வருவதால், இவர்களை ஆரம்பத்தில் தடுக்கவேண்டிய கட்டாயம் CSK-க்கு உள்ளது. மத்திய ஓவர்களில் பஞ்சாப் அலகளவில் பலவீனமடைவது CSK-க்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம். மார்கஸ் ஸ்டாய்னிஸை அணியில் சேர்ப்பது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலம் தரும்.
CSK-வில் மாத்ரே, பிரேவிஸ், ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்கள் சிறு நம்பிக்கை தருகின்றனர். புதிய விக்கெட் கீப்பர் வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு வழங்கலாம். அதேபோல், சுழற்பந்து வீச்சுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணியில் இடம் பெறலாம்.