இன்று ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதுடைய வீரர் மற்றும் குறைந்த வயதுடைய வீரர் யார்.? - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பிப்ரவரி இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர்.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பிப்.12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும், அதிக வயதுடைய வீரராக தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (42), குறைந்த வயதுடைய வீரராக ஆப்கானிஸ்தானின் நூர் அகமது (17) ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl Mega Auction senior and junior players


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->