இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி : ஜடேஜா உள்ளிட்ட முக்கிய 3 வீரர்கள் காயம் காரணமாக நீக்கம்.!!
jadeja rahane and ishant sharma ruled out of the 2nd test match
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்ததால், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போட்டி துவங்குவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா ஆகிய மூன்று வீரர்களும் காயம் காரணமாக இன்று தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
English Summary
jadeja rahane and ishant sharma ruled out of the 2nd test match