#T20Worldcup : இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும்.. மிதாலி ராஜ் கணிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்விய என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில் உலக கோப்பை குறித்து அந்தந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியா, தென்ஆப்பிரிக்காவும், குரூப் 1 பிரிவில் இருந்து நியூசிலாந்து அரைஇறுதிக்கு தகுதி பெறும். குரூப் 1 பிரிவில் 2வது அணியாக அரைஇறுதிக்கு நுழைவது யார்? என்பதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி நிலவும் என தெரிவித்துள்ளார்.

மேலும், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mitali Raj said T20 World Cup final will be India New Zealand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->