தமிழ்நாடு சாய்-களின் போராட்டம் வீண்; வெற்றியை பதித்த பஞ்சாப்..!
Punjab defeats Gujarat to win
ஐ.பி.எல். போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். சஷாங்க் சிங் அதிரடியாக ஆடி 44 ரன்னும் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 03 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும், சாய் சுதர்சன் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஷெர்பேன் ரூதர்போர்ட் 46 ரன்கள் எடுத்தார்.
முடிவில் 20 ஓவர்கள் முடிவில், குஜராத் அணி 05 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
English Summary
Punjab defeats Gujarat to win