தன்னை விமர்சித்த கம்பீருக்கு சிறப்பான பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வின்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒரு சில இடங்களில் குறைகள் இருப்பதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, இந்திய அணியில் தற்போது இருக்கும் குறை என்னவென்றால் அது சுழற்பந்துவீச்சு தான். இந்திய அணி ஒரு வ்ரிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்க வேண்டும். ஆனால் இந்திய அணியோ தொடர்ந்து அஸ்வினுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வருகிறது. அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால் களம் இறக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravichandran Ashwin best bowling figure against Zimbabwe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->