மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் ஆலோசகராக  டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்றது 

இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முக்கிய வீரர்களை பெங்களூர் அணி வாங்கியுள்ளது. இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தானா, ரிச்சா கோஷ், ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் எல்லீஸ் பெர்ரி ஆகிய முக்கிய வீரர்களை வாங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பெங்களூர் அணியின் ஆலோசகராக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sania Mirza appointed mentor of royal challengers Bangalore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->