மகளிர் டி20 உலகக் கோப்பை.. நாளை இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.!
Smriti manthana ruled out against Pakistan in T20 World Cup
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நாளை (பிப்ரவரி 12ம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தானா காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சிறப்பாக இருந்தாலும், இந்திய அணிக்கு பெரும் பலமாக இருப்பது தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா. இவர் வி கடந்த 2 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் நாளை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.
English Summary
Smriti manthana ruled out against Pakistan in T20 World Cup