தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய-நேபாள அணி இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய-நேபாள அணி இன்று மோதல்.!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நேபாளத்துடன் மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் அரை இறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது. இதுவரைக்கும் இந்த இரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் 16 ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய அணி, 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 5 ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்திருந்தன. 

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் மோதியதில், இந்திய அணி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இருந்தது. 

அந்த நம்பிக்கையில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய அணிக்கு துணை பயிற்சியாளர் மகேஷ் காவ்லி, இந்திய அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

இந்தத் தொடரில் நேபாளம் தனது முதல் ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் குவைத்திடம் தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் நேபாள அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றேத் தீர வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south asian football championship india vs nepal team clash today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->