டி20 உலகக் கோப்பை தொடரில் டபுள் ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரன்! சாதனைபடைத்த பேட் கம்மின்ஸ்! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று காலை ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில், முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து, 148 ரன்களை சேர்த்தது.

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும், உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் பேட் கம்மின்ஸ் படைத்தார்.

அடுத்தடுத்த பந்துகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், கரீம் ஜனத், குல்பாதின் நைப் ஆகியோரின் விக்கெட்களை கைப்பற்றிய கம்மின்ஸ், நான்காவது பந்திலும் ஆப்கானிஸ்தான் வீரர் நங்கெயாலியா விக்கெட்டை எடுக்க வேண்டியது. ஆனால், வார்னர் கைக்கு வந்த கேட்சை தவறவிடவே,  4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை பேட் கம்மின்ஸ் இழந்தார்.

இருப்பினும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த ஆட்டங்களில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும், டி20 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் லசித் மலிங்கா (SL), டிம் சவுதி (NZ), மார்க் பாவ்லோவிக் (SER), வசீம் அப்பாஸ் (MALTA) உடன் பேட் கம்மின்ஸ் (AUS) இணைந்துள்ளார்.

 

ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்க்ஸ்: இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பமே சொதப்பியது, டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாக, டேவிட் வார்னர் 3 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடியாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்து 59 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரக்கல் ஆப்கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்கவே, இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில், 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிடம் மண்ணை கவ்வியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Australia Pat Cummins Bangladesh Hat Trick


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->