#T20WorldCup : அரையிறுதிக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்.? 128 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்தேசம்.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்தேச அணி.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற போராடும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Bangladesh target of 128 against Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->