#T20Worldcup : இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்.. கோப்பை யாருக்கு.?
T20 World Cup final PAK vs ENG match Pakistan batting
டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/IMG_20221112_133318-2r8wf.jpg)
இதனையடுத்து இன்று மதியம் 1.30 மணிக்கு (நவம்பர் 13ஆம் தேதி) மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதில், வெற்றி பெறும் அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும். இவ்விரு தலா ஒரு முறை டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அந்த வகையில் 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணியும், 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது.
![](https://img.seithipunal.com/media/IMG_20221113_130602-r4ctl.jpg)
இன்றைய தினம் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இவ்விரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்
பாகிஸ்தான் அணி 11 வீரர்கள் :
பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான்(வி.கீ), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அப்ரிடி.
இங்கிலாந்து அணி வீரர்கள் :
ஜோஸ் பட்லர்(w/c), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்.
டி20 உலகக்கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
English Summary
T20 World Cup final PAK vs ENG match Pakistan batting