டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.!
T20 World Cup final Pak vs ENG match today
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து இன்று மதியம் 1.30 மணிக்கு (நவம்பர் 13ஆம் தேதி) மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
![](https://img.seithipunal.com/media/IMG_20221113_064702-n3wuj.jpg)
இதில், வெற்றி பெறும் அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும். இவ்விரு தலா ஒரு முறை டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அந்த வகையில் 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணியும், 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது.
இன்றைய தினம் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இவ்விரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பையில் இதுவரை நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
English Summary
T20 World Cup final Pak vs ENG match today