#T20WorldCup : ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு.. ரிஷப் பந்துக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைகிறது

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஜிம்பாவே அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குகிறார்.

ஜிம்பாப்வே அணி 11 வீரர்கள் : வெஸ்லி மாதேவெரே, கிரேக் எர்வின்(கே), ரெஜிஸ் சகப்வா(வி.கீ), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முனியோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகரவா, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி.

இந்திய அணி 11 வீரர்கள் : கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்(வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

டி20 போட்டியில் இதுவரை நேருக்கு நேர்

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 7 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளில் இந்திய அணியும், 2 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியதில்லை. தற்போது தான் முதல் முறையாக விளையாடுகிறது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup IND vs ZIM match India choose to bat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->