#T20WorldCup : அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா.? ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை.!
T20 World Cup IND vs ZIM match today
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைகிறது.
இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இடத்தில் உள்ளது. 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.
இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறித்து இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டிகளின் முடிவுகளை பொறுத்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்ககா ஆகிய மூன்று அணிகளுக்கும் இன்று வெவ்வேறு அணிகளுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தற்போது இன்று காலை 5.30 மணி முதல் அடிலெய்ட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது.
அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அதே மைதானத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா - ஜிம்பாவே அணிகள் மோதுகின்றன.
இதில், ஜிம்பாப்வே உடனான போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
டி20 போட்டியில் இதுவரை நேருக்கு நேர்
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 7 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளில் இந்திய அணியும், 2 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பையில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியதில்லை. தற்போது தான் முதல் முறையாக விளையாடுகிறது.
English Summary
T20 World Cup IND vs ZIM match today