#T20WorldCup : இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு.. 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைகிறது 

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஜிம்பாவே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கினார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணிகள் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் மற்றும் சூரிய குமார் யாதவ் அரை சதம் அடித்தனர்.

அதனைத் தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், முகமது ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், ஹர்ஸ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் 2 பிரிவு புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனையடுத்து நவம்பர் 10ம் தேதி 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup India beat Zimbabwe by 71 runs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->