#BREAKING : டி20 உலக கோப்பையில் வெளியேறிய தென்னாப்பிரிக்கா.. இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்.!
T20 World Cup India qualified semifinal
டி20 உலக கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் டி20 உலக கோப்பையில் இருந்து தென்னாபிரிக்க அணி வெளியேறி உள்ளது.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைகிறது.
இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இடத்தில் உள்ளது. 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.
இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறித்து இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டிகளின் முடிவுகளை பொறுத்திருந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்ககா ஆகிய மூன்று அணிகளுக்கும் இன்று வெவ்வேறு அணிகளுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை 5:30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்க முதலே தடுமாறியது.
அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் தென்னாபிரிக்க அணி டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளது. இதனையடுத்து குரூப் 2 பிரிவில் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
T20 World Cup India qualified semifinal