டி20 உலகக்கோப்பை : அயர்லாந்தை வீழ்த்தி.. அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தல 5 புள்ளிகளுடன் முதல் 3 இடத்தை பிடித்துள்ளன. இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இகுரூப்-1 பொறுத்த வரை இன்று நடைபெறும் 2 போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

அயர்லாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜோஷ்வா லிட்டில் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து. 3 விக்கெட் வீழ்த்தினார். அந்த 3 விக்கெட்களையும் ஹாட்ரிக் மூலம் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தின் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்த அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளதால் நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup New Zealand beat Ireland and qualify semi final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->