#T20WorldCup : வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையில் குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Pakistan beat Bangladesh and qualify semifinal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->