டி20 உலகக்கோப்பை : அரையிறுத்திக்கு முன்னேறுமா இங்கிலாந்து? 142 ரன்கள் இலக்கு.!
T20 World Cup Srilanka target of 142 against England
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
ஐசிசி 8வது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
டி20 உலக கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதனையடுத்து டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறப்போவது ஆஸ்திரேலியாவா? இங்கிலாந்தா? என்ற குழப்பம் நீடித்திருக்கிறது. இதில், எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதை இன்று நடக்கும் இங்கிலாந்து இலங்கை போட்டி பொறுத்துதான் முடிவு செய்யப்படும்.
இந்த நிலையில் இன்று மதியம் 1:30 மணிக்கு சிட்னி மைதானத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏனென்றால் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியின் நெட் ரன்ரேட் புள்ளிகள் ஆஸ்திரேலியவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
T20 World Cup Srilanka target of 142 against England