ஒலிம்பிக்ஸில் முதல் இந்திய வீராங்கனை! தங்கம் வெல்வாரா வினேஷ் போகத்?! சர்ச்சையும், சவாலும், சாதனையும்!
Vinesh Phogat Paris 2024 Bajrang Punia wrestling Olympic Games
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்துள்ள போகத்துக்கு, பிரதமர் மோடி ஃபோன் செய்யும் தருணத்திகு காது கொண்டிருப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத். மேலும், ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையையும் வினேஷ் போகத் படைத்துள்ளார்.
வினேஷ் போகத் - சர்ச்சையும், சவாலும், சாதனையும்!
29 வயதான வினேஷ் போகத் இந்தியாவுக்காக காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தவருக்கு கடந்த ஆண்டு பல்வேறு சவால்கள் மிகுந்ததாக அமைந்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து நடந்த போராட்டத்தில் வீனேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் போலீஸாரால் அவமரியாதை செய்யப்பட்டு, பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விவகாரம் தற்போதுவரை தீர்க்கப்படுமால் உள்ளது.
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், உலகின் நம்பர் 1 வீராங்கனை, 14 ஆண்டுகள் தோல்வியை சந்திக்காத வீராங்கனையான ஜப்பானின் யு சுசாகியை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து காலிறுதிப் போட்டியில் உக்ரைன் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் உறுதியாகியுள்ளது.
முன்னதாக வினேஷ் போகத்தின் வெற்றிகள் குறித்து இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே குரல் நசுக்கப்பட்டய, தெருக்களில் இழுத்து செல்லப்பட்டார். இந்தியாவின் தங்க மகள் ஆகப்போகும் அவருக்கும் பிரதமர் மோடி ஃபோன் மூலம் அழைக்கும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். டெல்லியில் எண்களின் போராட்டம் குறித்து வாய் திரைக்கதை பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவிக்க ஃபோன் செய்யும் துணிவு இருக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இரவு 11.23 மணிக்கு நடைபெறவுள்ள, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட்யை வினேஷ் போகத் எதிர்கொள்கிறார். அவர் தங்கம் வெல்வாரா? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
English Summary
Vinesh Phogat Paris 2024 Bajrang Punia wrestling Olympic Games