இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் - பாகிஸ்தான் நடிகை.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை ஜிம்பாப்வே வீழ்த்தினால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை சவால் விட்டுள்ளார்.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், வரும் நவம்பர் 6ம் தேதி மதியம் 1.30 மணிக்கு இந்தியா ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் தீவிர ரசிகரான பாகிஸ்தான் பிரபல நடிகை ஒருவர் இந்தியா ஜிம்பாவே போட்டி குறித்து  பரபரப்பு ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் 'ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பல்வேறு கமண்ட்களையும் பெற்று வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zimbabwe beat Pakistan i will marry Zimbabwe guy Pakistan actor tweet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->