சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்? - லிஸ்ட் இதோ.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும் தமிழகதம் முழுவதும் ஒவ்வொரு கிழமைகளில் பராமரிப்பு பணிக் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில், மின்தடை ஏற்படும் பகுதிகள் எவை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

"சென்னையில் (03.09.2024) செவ்வாய்கிழமையான இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அம்பத்தூர், போரூர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.

அதன் படி, அம்பத்தூரில் ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, அயப்பாக்கம், டி.என்.எச்.பி. பேஸ் I முதல் III வரை டி.என்.எச்.பி. 2394 குடியிருப்புகள், அயப்பாக்கம் முதல் திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர் முதல் அத்திப்பட்டு வானகரம் சாலை. அத்திப்பட்டு பகுதி, ரோஜா தெரு, குப்பம். கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என். சாந்திநகர், மேல் அயப்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர், பஞ்சாயத்து. நகர், சென்னை நியூ ரிட்டி, ஈடன் அவென்பூ, கோன் ராஜ்குப்பம், அச்ஏகாரம் தேவி நகர், சின்ன கோலடி ஜோதி நகர் மூன்று நகர், எழில் நகர் மற்றும் அன்னனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

போரூரில் மதானந்தபுரம், கெருகம்பாக்கம் ராமாபுரம், சின்ன போரூர், குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, காரம்பாக்கம் பகுதி, மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, முகலிவாக்கம் பகுதி, மவுலிவாக்கம் பகுதி, கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும்.

ஆர்.ஏ.புரம் பகுதியில், 1 முதல் 7வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம் 1வது முதல் 4வது குறுக்குத் தெரு, கிரீன் வேஸ் சாலை, பிஷப் காரடன். பிஷப் கார்டன் விரிவு, பாக்யரதி தெரு, விஸ்வநாதன் தெரு, காமராஜர் சாலை. கெமியர்ஸ் சாலை, கோ-ஆப்ரேடிவ் காலனி, ஸ்ரீ ராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளப் சாலை, சத்திய நாராயணா அவென்யூ, கிரெசென்ட் அவென்யூ, ஏபிஎம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, படவேட்டம்மன் தெரு, டர்ன் புல்ஸ் சாலை, பிரித்வி அவென்யூ, திருவேங்கடம் தெரு, ஆசின் நகர், கணபதி காலனி, கெமியர்ஸ் 1வது லேன், அடையாறு கிளப் கேட் சாலை, பக்ஸ் சாலை, ஆர்.கே.புரம், ஷுண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள்புரம் (வடக்கு, மத்திய, கிழக்கு), அன்னை சத்யா நகர் 1 முதல் 5வது தெரு, அன்னை தெரசா நகர், கோவிந்த சாமி நகர, கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, சிருங்கேரி மட சாலை மற்றும் வன்னியம்பதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

03 09 2024 today shutdown places in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->