திருப்பூரில் 1110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் 1110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மங்கலம் பகுதியில் போலீஸ்சார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகக்கும்படி அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அதில் மூட்டை மூட்டையாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ், கூலிப் போன்ற போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு முன் முரணாக பதில் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மங்கலம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மங்களத்தை சேர்ந்த ஃபக்ருதீன், அப்துல் ரஹீம், சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், 1110 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1110 kg of tobacco products seized in Tirupur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->