பள்ளி பேருந்து மோதி மாணவன் பலி... தென்காசி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் சைலப்பன் அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

நண்பர்களுடன் பேசிகொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அங்கு நின்றிருந்த சைலப்பன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கதினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th grade student Died in Accidnet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->